Menaka Mookandi / 2015 மார்ச் 26 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 19 வயதுப் பிரிவு பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அராலி சரஸ்வதி மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியும் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயமும் மோதிக்கொண்டன.
இரு அணிகளும் பலம் பொருந்திய அணிகளாக காணப்பட்ட போதிலும் முதற்பாதி ஆட்டத்தில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி தவறுகளை விட்ட நிலையில் சரஸ்வதி மகா வித்தியாலயம் 18:04 புள்ளிகள் என்ற முன்னிலையில் ஆட்டம் முடிவடைந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் பலத்த எதிர் பார்ப்பின் மத்தியில் களம் புகுந்த நிலையில் யூனியன் கல்லூரி புத்வேகத்துடன் விளையாடியமையால் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் சற்று தடுமாறிது.
இந்நிலையில் யூனியன் கல்லூரி 15:09 புள்ளிகள் என்ற முன்னிலையில் இரண்டாம் பாதி ஆட்டம் முடிவடைந்தது. ஆட்ட நிறைவில் அராலி சரஸ்வதி மகா வித்தியாயலம் 27:19 புள்ளிகள் என்ற நிலையில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியை வெற்றி பெற்று வலய சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.


3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago