Thipaan / 2015 மார்ச் 28 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
எவர்டொப் பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் எவர்டொப் கிங்ஸ் அணி சம்பியனானது.
இப்பிரிமியர் லீக்கின் இறுதிப் போட்டியானது எவர்டொப் கிங்ஸ் அணி, றியல் ஜிப்ரல்ரெஸ் ஆகிய அணிகளுக்கிடையில் அட்டாளைச்சேனை தைக்காநகர் அஷ்ஸஹ்றா வித்தியாலய மைதானத்தில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்றது.
அணிக்கு ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய றியல் ஜிப்ரல்ரெஸ் அணியினர் ஐந்து ஓவர்கள் முடிவில் 53 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எவர்டொப் கிங்ஸ் அணியினர் 4.4 ஓவர்களில் குறித்து ஓட்ட வெற்றி இலக்கை அடைந்து சம்பியன் கிண்ணத்தை தம்வசமாக்கிக்கொண்டனர்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக எம்.ஐ. றஸாத் தெரிவு செய்யப்பட்டார்.
வெற்றி பெற்ற அணிக்கான பணப்பரிசில் மற்றும் கிண்ணங்களை அணியின் தலைவர் ஏ.எல்.அஜ்மல் ஆசிரியர் மற்றும் எம்.என் மத்தீன் ஆகியோரிடம் அதிதிகள் வழங்கி வைத்தனர்.


10 minute ago
11 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
30 minute ago