Suganthini Ratnam / 2015 மார்ச் 29 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஸ்ணமிஷன் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு, வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (27) மாலை நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் ரி.சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜாசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டதுடன், அதிதிகளாக வாழைச்சேனை கோறளைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் நா.குணலிங்கம், கல்குடா கல்வி வலய உடல் கல்விப் பணிப்பாளர் எஸ்.சுபாஸ்சந்திரன் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது விளையாட்டு வீரர்களால் ஒலிம்பிக்தீபம் ஏற்றப்பட்டு அணிநடை பவனியுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
57 minute ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
9 hours ago
9 hours ago