Thipaan / 2015 மார்ச் 29 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்
அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமான கபடி சுற்றுப்போட்டியில், அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.றஸீன் தலைமையில் இடம்பெற்ற இறுதிப்போட்டிகள், அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்றன.
இறுதிப்போட்டியில் சோபர் விளையாட்டுக் கழகமும், மாக்ஸ்மன் விளையாட்டுக் கழகமும் மோதின.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், சோபர் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.
சோபர் விளையாட்டுக் கழகம் மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


10 minute ago
11 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
30 minute ago