Gavitha / 2015 ஏப்ரல் 01 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம். றம்சான்
அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பொலிஸ் நிலையத்தால் மேற்கொள்ளப்படவுள்ள 'போதைவஸ்து அற்ற சமூகம்' என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி தொடர்பாக ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (01) சாய்ந்தமருது அஸ்லம் பிக் மாட்டில் இடம்பெற்றது.
கல்முனை பொலிஸ் நிலையத்தால் எதிர்வரும் ஏப்ரல் 24, 25, 26ஆம் திகதிகளில் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நடாத்தப்படவுள்ள, தெரிவு செய்யப்பட்ட 14 அணிகளுக்கிடையிலான இந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி முழுமையாக 'போதைவஸ்து அற்ற சமூகம்' எனும் தொனிப்பொருளினை விழிப்பூட்டுவதாக அமையவுள்ளது.
கல்முனை பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி ஏ.டப்ளிவ்.ஏ. கப்பார் தலைமையில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்வில், சாய்ந்தமருது அஸ்லம் பிக் மாட் நிறுவனத்தின் உரிமையாளர் எ.ஆர். அஸ்லம் ரியாஜ், கல்முனை பொலிஸ் தொடர்பாடல் அதிகாரி எ.எல்.எ. வாஹிட் உட்பட விளையாட்டதிகாரிகள், விளையாட்டு கழக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

15 minute ago
18 minute ago
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
24 minute ago
30 minute ago