2025 நவம்பர் 19, புதன்கிழமை

புதிய விளையாட்டுக் கழகம் அங்குரார்ப்பணம்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அம்பாறை - அட்டாளைச்சேனை 3ஆம் குறிச்சியை மையப்படுத்தி புதிய விளையாட்டுக் கழகமான ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம், வெள்ளிக்கிழமை (3) நடைபெற்றது.

ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் ஹம்ஸா சனூஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக சுகாதார இராஜாங்க அமைச்சரரின் இணைப்புச் செயலாளர் யு.எம்.வாஹித் கலந்துகொண்டார்.

கௌரவ அதிதிகளாக திட்டமிடல் உத்தியோகஸ்தர் ஐ.எல்.பஜ்றுதீன், அக்கரைப்பற்று பிரதேச விளையாட்டு உத்தியோகஸ்தர் எம்.எச்.எம்.அஸ்வத், லக்கி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் அன்வர் நௌசாத், பிரதித் தலைவர் எஸ்.எம்.அறூஸ், கிராம சேவகர் ஏ.எல்.அஸ்வர், அனர்த்த நிவாரண உத்தியோகஸ்தர் ஏ.றியாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விளையாட்டுத்துறையின் முன்னேற்றத்தில் விளையாட்டுக் கழகங்களின் பங்களிப்பு தொடர்பில் அதிதிகள் இங்கு உரையாற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X