2025 நவம்பர் 19, புதன்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Thipaan   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் காத்தான்குடி ரோயல்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை(03)  பிற்பகல் இடம்பெற்றது.

கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக அடிப்படை வசதிகள் ஏதுமின்றி வேறு இதர அணிகளின்  உதவியுடன் பயிற்சிகள் மேற்கொண்டு இக்கழகம் விiயாடிவருகிறது.

மேற்படி விளையாட்டுக் கழகத்தினை மேலும் வலுப்படுத்தும் வகையில் கடின பந்து கிரிக்கட் விளையாட்டு உபகரணங்களை தாம் வழங்கியதாக நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் தவிசாளர் எம்.எம். அப்துர்ரஹ்மான் தெரிவித்தார்.

கழக உறுப்பினர் எல்.எம். சிப்லி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் தவிசாளர் எம்.எம். அப்துர்ரஹ்மான், அதன் சூறாசபை உறுப்பினர்களான எம்.எம். அமீர் அலி, காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஆயுர்ஆ.மிஹ்ழார், ஆசிரியர்களான, எஸ்.எம்.எம். பஸீர், எம்.வை.எம். சரீப் உட்பட கழகத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X