2025 நவம்பர் 19, புதன்கிழமை

தலைமைத்துவ பயிற்சியும் கழக சீருடை அறிமுகமும்

Gavitha   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

பாலமுனை அறபா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த தலைமைத்துவ பயிற்சியும் கழக சீருடை அறிமுகமும் நேற்று வெள்ளிக்கிழமை (03) நிந்தவுர் பிரின்ஸ் தோட்டத்தில் நடைபெற்றது.

அறபா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.ஆப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இங்கு விளையாட்டுக்கழக வீரர்களுக்கு வைத்தியரும் உளவளத்துறை விரிவுரையாளருமான டாக்டர் எம். நஸீன் தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கினார்.

அறபா கழகத்துக்கான புதிய சீருடைகளை பிரதம அதிதியான தவிசாளர் எம்.ஏ.அன்ஸிலுக்கு கழகத் தலைவர் எஸ்.ஆப்தீன் வழங்கிவைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X