Thipaan / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்
அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமான எல்லே சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில், பாலமுனை அல்-அறபா விளையாட்டுக்கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (04) நடைபெற்ற இறுதிப்போட்டியில், ரைஸ்டார் விளையாட்டுக் கழகமும் அல்-அறபா விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.
மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இவ் இறுதிப்போட்டியில் இரண்டு கழகங்களும் சமமான புள்ளிகளைப் பெற்றுக் கொண்டன.
மேலதிக நேரத்தில் 1 புள்ளியினால் அல்-அறபா விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.
இப்போட்டிகள் விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.றஸீன் தலைமையில் இடம்பெற்றன.
அல்-அறபா விளையாட்டுக் கழகம் மாவட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


3 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026