2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சைக்கிள் சவாரி இரண்டாம் கட்டம் நிறைவு

George   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

இலங்கை விமானப்படையின் 64ஆம் ஆண்டு நிறைவையொட்டி, இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்த, சைக்கிள் சவாரியின் இரண்டாம் கட்டம் புத்தளத்தில் நிறைவடைந்தது.

புத்தளம் பஸ் தரிப்பு நிலையத்தில் வெள்ளிக்கிழமை(03) பகல், சைக்கிள் சவாரி நிறைவுற்றதுடன் சைக்கிளோட்ட வீரர்களை, புத்தளம் நகர முதல்வரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸ் வரவேற்றார்.

மூன்று கட்டங்களாக இடம்பெற்ற இந்த சைக்கிள் சவாரி, மொத்தமாக 431 கிலோமீற்றர் தூரத்தை கொண்டதாகும். அபான்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்த சவாரியில் விமானப்படை வீர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .