2025 நவம்பர் 19, புதன்கிழமை

பாராட்டிக் கௌரவிக்கும் வைபவம்

Thipaan   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை, அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் துறை சார்ந்தவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் வைபவம் மீலாத்கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) மாலை இடம்பெற்றது.

கழகத்தின் தலைவர் எம்.ஐ.எம்.றியாஸ் அதிபர் தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்வில் சமூகசேவை, விளையாட்டு, அரசியல் துறைகளில் தம்மை அர்ப்பணித்து சேவையாற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

சமூக சேவை துறை சார்பாக அகில இலங்கை முஸ்லிம் லீக்வாலிப முன்னணிகளின் தேசிய தலைவரும், ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தருமான எம்.ஐ.உதுமாலெவ்வை கௌரவிக்கப்பட்டார்.

விளையாட்டுத்துறை சார்பாக ஓய்வு பெற்ற தேசிய கல்வியற் கல்லூரியின் உடற்கல்வி போதனாசிரியரும் கல்முனை கல்வி மாவட்ட சாரண ஆணையாளருமான எம்.ஐ.எம்.முஸ்தபா, அரசியல் துறை சார்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கழக ஆலோசகர்களினால் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், அ.இ.மு.லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட ஆலோசகர் டாக்டர் ஏ.எல்.அகமட்லெவ்வை, கழகத்தின் ஆலோசகர்களான அதிபர் ஏ.எல்.யாசீன், ஆசிரியர்களான எம்.ஐ.ஹாசீம், ஏ.ஜீ.பௌஸ், எம்.ஐ.ஜஃபர்,ஏ.சீ.றிஸாட், எம்.எச்.றசாம், உபதலைவர் ஏ.சீ.அம்சூன், உப செயலாளர் என்.அர்சாத் உட்பட விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வானது அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அட்டாளைச்சேனை கிளையின் அனுசரணையுடன் இடம்பெற்றது.

இதன்போது கழக உறுப்பினர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X