2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இல்ல விளையாட்டு போட்டி

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் 2015ஆம் ஆண்டுக்கான இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் 260 புள்ளிகளைப் பெற்று பஜ்றி இல்லம் சம்பியனானது.
 
கடந்த இரு வாரங்களாக கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வந்த இல்லங்களுக்கிடையிலான இவ்விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு, வியாழக்கிழமை (09) இடம்பெற்றது.
 
இப்போட்டியில் இரண்டாமிடத்தை 213 புள்ளிகளைப் பெற்று நஜ்மி இல்லமும், 181 புள்ளிகளைப் பெற்ற கமறி இல்லம் மூன்றாம் இடத்துக்கு வந்தது.

இதன்போது இடம்பெற்ற கால்பந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய போட்டிகளில் கமறி இல்லம் சம்பியனானது, வலைப்பந்துப் போட்டியில் நஜ்மி இல்லமும், இல்ல அழகு படுத்தல் மற்றும் அணிநடை ஆகிய போட்டிகளில் பஜ்ரி இல்லமும் வெற்றி பெற்றது.

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் என்.எச்.எம். சித்திரானந்த மற்றும் பிடாதிபதிகள், விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .