2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சமநிலையில் முடிவடைந்த போட்டி

Kogilavani   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக்காத புத்தளம் நகரின் மிகப்பலம் வாய்ந்த கால்ப்பந்தாட்ட அணிகளான லிவர்பூல் மற்றும் விம்பிள்டன் அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி 2:2 கோல்களினால் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

புத்தளம் வாழ் கால்பந்தாட்ட ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மிக முக்கியமான கால்;பந்தாட்ட போட்டியானது புத்தாண்டு தினத்தன்று (14) மாலை புத்தளம் சாகிரா தேசிய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

புத்தளம் கால்;பந்தாட்ட லீக் நடத்திவரும் புள்ளிகள் அடிப்படையிலான கால்;பந்தாட்ட தொடருக்கான  போட்டியிலேயே இவ்விரு அணிகளும் மோதிகொண்டன.

போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே விம்பிள்டன் அணி தனது அதிரடியான முதலாவது கோலை புகுத்தியது. அதனை தொடர்ந்து அவ்வணி தனது இரண்டாவது கோலையும் பெற்றுக்கொண்டது. எனினும் இதற்கு பதிலடியாக லிவர்பூல் அணி இடைவேளை நெருங்கும்போது ஒரு கோலை பெற்றுக்கொண்டது.

இடைவேளைக்கு பின்னர் இரு அணிகளுமே தமது திறமைகளை மைதானத்தில் வெளிக்காட்டின. இருபக்க கோல் கம்பங்களிலும் பந்து மோதி எகிறியது. விம்பிள்டன் அணியின் கோல் காப்பாளர் எம்.இம்ரான் மற்றும் லிவர்பூல் அணியின் கோல் காப்பாளர் கே.எம்.பரோஜ் ஆகியோர் தமது கோல் கம்பங்களை நோக்கி வந்த பந்தை லாவகமாக தடுத்தி நிறுத்தினர்.

எனினும் போட்டி நிறைவு பெரும் தருவாயில் லிவர்பூல் அணி தனது இரண்டாவது கோலை பதிவு செய்தததால் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

விம்பிள்டன் அணிக்காக எஸ்.எம்.சரீக், எம்.எஸ்.எம்.நுஸ்பான் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலை பெற்றுக்கொடுத்ததோடு லிவர்பூல் அணிக்காக எம்.தஸ்னீம், எம்.பவாஸ் ஆகியோர் கோலை பெற்றுக்கொடுத்தார்கள்.

போட்டிக்கு நடுவர்களாக எம்.எஸ்.எம்.நௌபி, எம்.எம்.சர்ஜூன், ஏ.ஓ.அசாம் ஆகியோர் கடமையாற்றினர். இந்த போட்டி முடிவுகளின் பிரகாரம் மொத்தமாக விம்பிள்டன் அணி 10 புள்ளிகளையும், லிவர்பூல் அணி 9 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .