2025 ஜூலை 07, திங்கட்கிழமை

காந்தி விளையாட்டு கழகம் சம்பியன்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை மாவட்ட சிவில் பிரஜைகள் குழுவினரால் சித்திரைப் புத்தாண்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கோளாவில் காந்தி விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

அக்கரைப்பற்று இராணுவ மைதானத்தில் வியாழக்கிழமை (16)  நடைபெற்ற போட்டிகளில் இன ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் மூவினத்தையும் சேர்ந்த காந்தி, லக்கி, ஜுனியஸ் ஆகிய மூன்று கழகங்கள் பங்குபற்றின.

அணிக்கு 11 பேர் கொண்ட 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியின் இறுதிப்போட்டியில் கோளாவில் காந்தி மற்றும் அட்டாளைச்சேனை லக்கி ஆகிய அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய லக்கி அணியினர் 06 விக்கெட்டுக்களை இழந்து 102 ஓட்டங்களைப் பெற்று கடினமான வெற்றி இலக்கினை எதிரணிக்கு வழங்கினர். இருந்த போதும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய காந்தி அணியினர் 9.4 ஓவர்கள் நிறைவினில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி பெற்றனர்.

இதில் அம்பாறை மாவட்ட சிவில் பிரஜைகள் குழுவின் தலைவர் எம்.ஜெ.அன்வர் நௌசாட், பதிவாளர் எஸ்.வரதராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .