2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நியூ ஒலிம்பிக் விளையாட்டு கழகத்தின் 49ஆவது விழா

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் 49ஆவது விளையாட்டு விழா, தலைவர் செ.குமணதாஸ் தலைமையில் சரஸ்வதி வித்தியாலய ஒலிம்பிக் மைதானத்தில் சனிக்கிழமை (18) இடம்பெற்றது.

இதன்போது தமிழர் கலாசாரம் சார்ந்த தலையணைச் சமர், வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் முட்டியுடைத்தல் போன்ற பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இவ் விழையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் சிறுவர்கள் தொடக்கம் பெரியார்கள் வரையிலான ஆண், பெண் இருபாலாரும் பங்குபற்றக் கூடியவகையில் அமைந்திருந்தன.

அரசியல்வாதிகள், பலதரப்பட்ட துறைசார்ந்த கல்விமான்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் 49ஆவது விளையாட்டு விழாவில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .