2025 ஜூலை 07, திங்கட்கிழமை

உகண பிரதேச செயலாளர் பிரிவு சம்பியன்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அம்பாறை மாவட்ட விளையாட்டுப்போட்டியின் முதற்கட்ட நீச்சல் போட்டி, சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுத் தொகுதியில் திங்கட்கிழமை (20) நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் வீ.ஈஸ்வரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நீச்சல் போட்டியில் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் இருந்து வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதில் கூடுதலான புள்ளிகளைப் பெற்று உகண பிரதேச செயலாளர் பிரிவு முதலாமிடத்தைப் பெற்று சம்பியன் பட்டத்தைப் பெற்றுக்கொண்டது.

இரண்டாமிடத்தை அம்பாறை பிரதேச செயலாளர் பிரிவு பெற்றுக்கொண்டது. இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மாகாணப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .