2025 ஜூலை 07, திங்கட்கிழமை

யங்கென்றீஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Kogilavani   / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தால் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்டு வரும் எப்.ஏ.கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆட்டமொன்றில் இளவாலை யங்ஹென்றீஸ் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று ஐந்தாவது சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (26)  நடைபெற்ற இந்த போட்டியில் நவாலி சென் பீற்றர்ஸ் விளையாட்டுக்கழகமும் யங்ஹென்றீஸ் விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டன.

போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை போட்ட சென்.பீற்றர் அணி, யங்ஹென்றிஸ் அணிக்கு அதிர்ச்சியளித்தது. எனினும் அதிலிருந்து மீண்ட யங்ஹென்றிஸ் அணி, பதிலுக்கு அடுத்தடுத்து 3 கோல்களைப் போட்டது. முதல்பாதியாட்டத்தில் யங்ஹென்றிஸ் அணி 3:2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியாட்டத்தில் சென்.பீற்றர் அணியினர் அடித்த கோலை, நடுவர் முறையற்ற கோல் என அறிவித்தனர். சில நிமிடங்களில் யங்ஹென்றிஸ் அணியும் ஒரு கோல் போட்டது. அதுவும் நடுவரால் நிராகரிக்கப்பட்டது. மேலதிக கோல்கள் இரண்டாவது பாதியாட்டத்தில் பெறப்படவில்லை. யங்ஹென்றிஸ் அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .