George / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்
அச்சுவேலி மத்திய விளையாட்டுக் கழகம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட அணிகளுக்கிடையில் நடத்திய 5 ஓவர்கள் மட்டுபடுத்தப்பட்ட அணிக்கு 6 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியில் சில்வர் லயன்ஸ் அணி சம்பியனாகியது.
இந்தச் சுற்றுப்போட்டியில் 8 அணிகள் பங்குபற்றின, லீக் முறையில் போட்டிகள் நடைபெற்று, பிளே ஓவ் சுற்றுக்கு 4 அணிகள் தெரிவாகின.
பிளேவ் சுற்றிலிருந்து இறுதியாட்டத்துக்கு சில்வர் லயன்ஸ் அணியும் ரெட் ரைநோஸ் அணியும் தெரிவாகின. இறுதிப்போட்டி அச்சுவேலி மத்திய விளையாட்டுக்கழக மைதானத்தில் திங்கட்கிழமை (27) நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சில்வர் லயன்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கி, 5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ரெட் ரைநோஸ் அணி, 4 ஓவர்களில் 38 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்து, தோல்வியடைந்தது.
1 hours ago
9 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago
07 Mar 2026