2025 ஜூலை 07, திங்கட்கிழமை

காத்தான்குடியில் உதைப்பந்தாட்ட போட்டி

Gavitha   / 2015 மே 02 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 85ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி வெள்ளிக்கிழமை (01) கல்லூரி மைதானத்தில் அதிபர் யூ.எல்.ஏ. முபாறக் தலைமையில் நடைபெற்றது.

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட கழகங்களுக்கிடையில் நடத்தப்பட்ட இப்போட்டியின் இறுதிப் போட்டியில் பாலமுனை நெசனல் விளையாட்டுக் கழகமும் ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டன.

இதில் ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழக அணியினர் 4:0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .