2025 ஜூலை 07, திங்கட்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 மே 05 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.சசிக்குமார்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடெங்கிலும் உள்ள இளைஞர்; கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் வேலைத் திட்டத்ததை முன்னெடுத்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இளைஞர் கழகங்களுக்கு இவை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு திருகோணமலை நகரம், சேருவில, ஹோமரன்கடவெல போன்ற பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதன் பிரதான நிகழ்வு திருகோணமலை நகரத்தில் ஸ்ரீகோணேஷ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது, பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 50 இளைஞர் கழகங்களுக்கு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

துடுப்பாட்டம், கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்களுக்கான உபகரணங்கள் இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டன.

திருகேணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் அ.ஹமித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண  வீதி, நீர்பாசனம், வீடமைப்பு அமைச்சர் ஆரியவதி கலபதி, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண பணிப்பாளர் க.தவராசா, பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் அருள்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .