2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மகாஜனாக் கல்லூரி வெற்றி

Thipaan   / 2015 மே 06 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட பாடசாலைகளின் 15 வயதுப்பிரிவு கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில், என்.நிசானுயன் பெற்ற 5 விக்கெட்களால் மகாஜனாக் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

மகாஜனாக் கல்லூரியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியை எதிர்த்து மகாஜனாக் கல்லூரி மோதியது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய சென்ஜோன்ஸ் கல்லூரி 24 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 132 ஓட்டங்களை பெற்றது. எம்.சலோமியன் 35, எஸ்.எல்சான் ஆர்.டேனுசன் 23 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். 

மகாஜனாக் கல்லூரி சார்பில் பந்து வீசிய என். நிசானுயன் 07 ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்டமற்ற ஒவருடன் 17 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மகாஜனாக் கல்லூரி 26.3 ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ஆர்.பகீரதன் 25, கி.கிரிசாந் என்.நீல் ஜோன்சன் தலா 14, என்.நிசானுயன் 13 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். 

சென்ஜோன்ஸ் கல்லூரி சார்பில் பந்து வீசிய கே.கஜதீபன் 10 ஓவர்கள் பந்துவீசி 02 ஓட்டமற்ற ஓவர்களுடன் 30 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், ஆர்.தனுசன் 04 ஓவர்கள் பந்துவீசி 31 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுகளையும்; கைப்பற்றினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .