2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி ஆரம்பம்

Gavitha   / 2015 மே 06 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வடமாகாண கல்வித் திணைக்களத்தால்; வடமாகாணப் பாடசாலை வீர, வீராங்கனைகளுக்கிடையில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

முதல் நிகழ்வாக அரைமரதன் ஓட்டப்போட்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 4 கட்டங்களாக பெரு விளையாட்டுக்கள் நடைபெறவுள்ளன. முதலாம், இரண்டாம் கட்டங்கள் முல்லைத்தீவிலும்  மூன்றாம் கட்டம் வவுனியாவிலும் நான்காம் கட்டம் யாழ்ப்;பாணத்திலும் நடைபெறவுள்ளன.

மாகாண மட்டப் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள தனிநபர் போட்டியாளர்கள், முதல் ஆறு இடங்களைப் பெறுபவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்குதல், குழு நிலைப் போட்டிகளில் முதல் நான்கு இடங்களைப் பெறுபவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்குதல் என்பன இந்தாண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்படுகின்றது.

கடந்த காலங்களில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு மட்டும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும் இம்முறை மாகாண விளையாட்டுப் போட்டி சம்பந்தமாக நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, இதனை வலியுறுத்தியதாகவும் இதன் அடிப்படையில் இம்முறை அதிக எண்ணிக்கையானவர்கள் மாகாண மட்டத்தில் சான்றிதழ்களை பெறவுள்ளதாகவும் மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .