Gavitha / 2015 மே 07 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சால் பாடசாலை மாணவர்களுக்கு இடையே வருடாந்தம் நடத்தப்படும் அரைமரதன் ஒட்டப் போட்டி எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை 6.30 மணிக்கு புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து ஆரம்பமாகும் இந்த அரைமரதன் ஓட்டம் முல்லைத்தீவில் முடிவடையவுள்ளது.
ஆண்கள், பெண்களுக்காக நடைபெறும் இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் முதல் பத்து இடங்களைப் பெற்ற வீர, வீராங்கனைகள் இதில் பங்குபற்றுகின்றனர்.
வெளிமாவட்டங்களில் இருந்து போட்டியில் கலந்துகொள்ளச் செல்லும் வீர, வீராங்கனைகள் முல்லைத்தீவில் முதல்நாள் சென்று தங்கியிருந்து போட்டியில் பங்குபற்றுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஆண் போட்டியாளர்கள் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலும் பெண் போட்டியாளர்கள் முல்லைத்தீவு சுப்பிரமணியம் வித்தியாலயத்திலும் தங்கிக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
13 minute ago
17 minute ago
44 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
44 minute ago
3 hours ago