Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 மே 09 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் 18ஆவது வருடாந்த விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை (08) பிற்பகல் கல்லடி, சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மட்டக்களப்பு வலய கல்வி உடற்கல்வி பிரதிப்பணிப்பாளர் வி.லவகுமாரின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாம, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் உட்பட வலய கல்விப்பணிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது விளையாட்டு நிகழ்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்வுகளும் கலைகலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.
அத்துடன் தற்போது விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுவருவதுடன் பெருமளவான பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
43 minute ago
50 minute ago