Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Thipaan / 2015 மே 09 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் நிர்வாகத்தை புதிய நிர்வாகம் பொறுப்பெற்றுக்கொண்டதன் பின்பு நடைபெற்ற முதலாவது கால்ப்பந்தாட்ட போட்டியில் புத்தளம் நகரின் மிகப்பழைமை வாய்ந்ததும் பலம் வாய்ந்த அணியுமான த்ரீ ஸ்டார்ஸ் அணி 04 கோல்களினால் இலகு வெற்றி அடைந்தது.
இந்த போட்டியானது வெள்ளிக்கிழமை (08) மாலை புத்தளம் சாகிறா தேசிய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கின் முன்னைய நிர்வாகம் நடாத்தி வந்த புள்ளிகள் அடிப்படையிலான கால்ப்பந்தாட்ட தொடர் நிறைவு பெறுகின்ற தருவாயில், லீக்கின் நிர்வாகத்தை பொறுப்பேற்ற புதிய நிர்வாகம் இப்போட்டி தொடரினை தொடந்து நடாத்தி செல்ல தீர்மானித்ததையடுத்து இந்த முதலாவது போட்டி இடம்பெற்றது.
வழமைக்கு மாறாக போட்டி நடைபெறும் மைதானம் அழகு படுத்தப்பட்டு, பார்வையாளர்களுக்கான இட அமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு, நான்காவது நடுவருக்கான இட அமைப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.
இந்த போட்டியில் த்ரீ ஸ்டார்ஸ் அணியை புத்தளம் நகரின் மற்றுமொரு பழைமை வாய்ந்த அணியான போல்டன் அணி எதிர்த்தாடியது.
அண்மை கால போட்டிகளில் சற்று பின்னடைவை சந்தித்திருந்த த்ரீ ஸ்டார்ஸ் அணி இப்போட்டியில் தனது அபார திறமையை வெளிக்காட்டியதன் பிரதிபலனாக அவ்வணி இப்போட்டியில் வெற்றி பெற்றதோடு 03 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டது.
த்ரீ ஸ்டார்ஸ் அணிக்காக இன்சாப், சபான், முஸ்தாக், சபீக் ஆகியோர் கோல்களை பெற்றுக்கொடுத்தனர்.
இப்போட்டிக்கு நடுவர்களாக எம்.ஏ.எம். பஸ்ரின். எம்.எஸ்.எம். நௌபி, எம்.ஐ.எம். அலி, எம்.எஸ்.எம். ரபீக் ஆகியோர் கடமையாற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago