George / 2015 மே 12 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மோர்சாப்பிட்டி வை.எம்.ஏ.சி விளையாட்டுக் கழகத்தின் 87 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை(10) நடைபெற்றன.
பயனியர் வீதியில் அமைந்துள்ள கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அன்றைய தினம் காலையில் சைக்கிளோட்ட போட்டியும் நடைபெற்றது.
பிற்பகலில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பல்வேறு தரப்பினரும் ஈர்வத்துடன் கலந்து கொண்டனர்.
கழகத்தின் தலைவர் ஈ.வைரமுத்து தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தொல்லியல் ஆய்வாளருமான செல்வி க.தங்கேஸ்வரி ஆகியோர் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .