George / 2015 மே 12 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பீடங்களுக்கிடையிலான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் வணிக முகாமைத்துவ பீடம் சம்பினானது. பல்கலைக்கழகத்தின் உடற்கல்விப் பிரிவினால் நடத்தப்பட்ட இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி, பல்கலைக்கழக மைதானத்தின் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றது.
இறுதி போட்டியில் வணிக முகாமைத்துவ பீடம் மற்றும் இஸ்லாமிய அறபு கற்கை பீடம் மோதின. இப்போட்டியில் வணிக முகாமைத்துவ பீடம் 5க்கு 01 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இறுதி நிகழ்வில் உடற்பயிற்சி போதானாசிரியர் எம்.எல்.ஏ.தாஹிர், மாணவர் நலன்புரி சேவைகள் பிரிவின் பணிப்பாளர் எம்.ஏ.எம்.சமீம், உடற்பயிற்சி ஆலோசகர் கே.எம்.முபாறக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .