Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 மே 12 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம், யாழ். மாவட்ட பாடசாலைகளின் 15 வயதுப்பிரிவு கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடத்திவரும் 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போட்டியொன்றில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி வெற்றிபெற்றது.
யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (09) நடைபெற்ற போட்டியில் சென். பற்றிக்ஸ் அணியும் சென். ஜோன்ஸ் அணியும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென். பற்றிக்ஸ் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றது. பி.கஸ்ரோ 53, எம்.மொனிக் 30, எஸ்.டிலக்ஷன் 25 ஓட்;டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் சென். ஜோன்ஸ் அணி சார்பாக, எஸ்.பிரசாத் 2, என்.செந்தூரன் 2, கஜதீபன் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென். ஜோன அணி, 29.4 ஓவர்களில் அனைத்து விக்கெடடுக்;களையும் இழந்து, 144 ஓட்டங்களைப் பெற்றது. எஸ்.பிரசாத் 26, என்.தனுஜன் 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் சென். பற்றிக்ஸ் கல்லூரி சார்பில் என்.நிருசிகன் 03, எஸ்.டிலக்சன் 03, என்.ஐவன் 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
19 minute ago
34 minute ago