2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட போட்டி

Kogilavani   / 2015 மே 12 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அமரர் தங்கம்மா ஞாபகார்த்தமாக அக்கரைப்பற்று கோளாவில் காந்தி விளையாட்டுக்கழகம,  கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகளை, கோளாவில் திராயப்பர் பாலாத்தை பொதுவிளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை(10) நடத்தியது.

10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட 11 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கு பற்றின.
இறுதிப்போட்டியில் கோளாவில் காந்தி விளையாட்டுக்கழகமும் தம்பிலுவில் எதிரொளி அணியும் மோதிகொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய கோளாவில் காந்தி விளையாட்டுக்கழகம் 10ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 73 ஓட்டக்களைபெற்று 74 எனும் வெற்றி இலக்கை அடைந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எதிரொளி அணி 9.3 ஓவர்கள் நிறைவில் 76 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இப்போட்டியின் பின்னர் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் கோளாவில் காந்தி விளையாட்டுக்கழகமும் கண்ணகிபுரம் கண்ணகி விளையாட்டுக்கழகமும் மோதின.

இடைவேளை வரை இரு அணிகளும் ஒரு கோளையும்  போடாத நிலையில் மழை குறுக்கிட்டது.

இருப்பினும் தொடர்ந்த இடைவேளையின் பின்;னரான நேரத்தின் இறுதிக்கட்டத்தில் கண்ணகி அணியின் வீரரால் அடிக்கப்பட்ட கோணர் கிக் கோளாக மாற்றப்பட்டதுடன் அதுவே வெற்றி கோளாகவும் மாறியது.

இறுதியில் சிறந்த வீரர்களுக்கான விசேட வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் சம்பியன்களுக்கான அமரர் தங்கம்மா ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்களை இரு அணியின் தலைவர்களும் பெற்றுக் கொண்டனர்.

இருபோட்டிகளினதும் இறுதிப்போட்டிக்கு கோளாவில் காந்தி அணி தெரிவு செய்யப்பட்ட போதிலும் சம்பியனாக தெரிவு செய்யப்படாமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .