Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 மே 15 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை ஊழியர்களிடையே இடம்பெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஃபன் ஸ்டார் அணி சம்பியனானது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சமூக நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டி, அக்கரைப்பற்று அதாஉல்லா விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை (14) நடைபெற்றது.
07 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹெல்த் ஸ்டார் அணியினர் 64 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஃபன் ஸ்டார் அணியினர் 6.3 ஓவர்களில் குறித்த இலக்கை பூர்த்தி செய்து 65 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றனர்.
நலன்புரிச் சங்கத்தின் தலைவரும் ஆதார வைத்தியசாலையின் கணக்காளருமான எஸ்.எம்.கலீல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எம். ஜஃபர் மற்றும் அக்கரைப்பற்று மக்கள் வங்கியின் முகாமையளர் எஸ்.எம்.இமாமுதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago