Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 மே 23 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் லிவர்பூல் மற்றும் தில்லையடி நியூ பிரண்ட்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற கால்ப்பந்தாட்ட போட்டியில் லிவர்பூல் அணி 03 : 01 கோல்களினால் வெற்றி பெற்று 03 புள்ளிகளை தனதாக்கி கொண்டது.
புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக் நடாத்திவரும் புள்ளிகள் அடிப்படையிலான கால்ப்பந்தாட்ட தொடருக்கான இவ் ஆட்டமானது வெள்ளிக்கிழமை (22) மாலை புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
லிவர்பூல் அணிக்காக நஸீம், பவாஸ், வியாஸ் ஆகிய முன்கள வீரர்களும் , நியூ பிரண்ட்ஸ் அணிக்காக எம்.ஜஹீரும் கோல்களை பெற்றுக்கொடுத்தனர்.
இந்த போட்டிக்கு நடுவர்களாக ஏ.எச். உமர்பாச்சா, ஏ.ஏ.எம். கியாஸ் மற்றும் எஸ்.ஏ.எம். சைபுதீன் ஆகியோர் கடமையாற்றினர்.
இந்த வெற்றியின் மூலமாக லிவர்பூல் அணியானது இந்த தொடரில் இன்னும் ஒரே ஒரு போட்டி மிகுதி இருக்கின்ற நிலையில் மொத்தமாக 12 புள்ளிகளோடு சம்பியன் கனவு பலிக்குமா என்பதை ஏக்கத்தோடு பார்த்திருக்கிறது.
தொடரில் பங்கேற்ற 09 அணிகளில் நான்கு அணிகள் சம்பியன் கனவை நோக்கி முன் நகர்ந்திருந்தாலும் கூட பிற அணிகளின் வெற்றி தோல்விகளிலேயே தமது அணியின் தலைவிதியை தீர்மானிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago