2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வண பிதா கேபியர் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட போட்டி

Sudharshini   / 2015 மே 24 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா
 
மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி பழைய மாணவ சங்க ஏற்பாட்டில்  வண பிதா கேபியர் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட 4 ஆம் வருட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு, மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி வண பிதா கேபியர் அரங்கில் வெள்ளிக்கிழமை (22) ஆரம்பமானது.
 
இப்போட்டி தொடரின் இறுதி நாள் போட்டி இன்று (24) இடம்பெறுகின்றது.  

இத்தொடரில் 08 அணிகள் பங்குபற்றுகின்றன. மட்டக்களப்பு, யாழ்பாணம், ஸ்ரீ லங்கா பொலிஸ், ஸ்ரீ லங்கா இராணுவம், மொரட்டுவ வை.எம்.சி, ஓல்ட் பென்ஸ் கழகம்  கொழும்பு, டிலா சாலியன்  கொழும்பு, அகில இலங்கை பல்கலைகழக அணிகள் ஆகியன பங்குபற்றுகின்றன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி .எஸ் .எம் .சார்ள்ஸ், அருட்தந்தை போல் சற்குணநாயகம், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் மா அதிபரின் பிரதி செயலாளர் இந்திக்க சில்வா ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .