Gavitha / 2015 மே 27 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்
அம்பாறை, அட்டாளைச்சேனை நியுஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் கால்பந்தாட்ட அணியினருக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, கோணாவத்தை விளையாட்டு கழக அலுவலக முன்றலில் திங்கட்கிழமை (25) இடம்பெற்றது.
இந்நிகழ்வு நியுஸ்டார் விளையாட்டு கழகத்தின் தலைவர் எம்.ஐ.எம் றியாஸ் தலைமையில் இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 35 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கால் ந்தாட்ட காலணி போன்ற விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் ஊடகவியலாளர்களான ஏ.எல்.றமீஸ், எஸ்.எம்.அறூஸ் மற்றும் கழக ஆலோசகர்கள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்படத்தக்கது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .