2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கபடி போட்டியில் பண்டத்தரிப்பு ஜசிந்தா றோமன் கத்தோலிக்க பாடசாலை சம்பியன்

Thipaan   / 2015 மே 27 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வடமாகாண கல்வித் தினைக்களத்தால் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 15 வயதுப் பிரிவு பெண்களுக்கான கபடிப் போட்டியில் பண்டத்தரிப்பு ஜசிந்தா றோமன் கத்தோலிக்க பாடசாலை  மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற இறுதிப் போட்டியில் பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலையும் பண்டத்தரிப்பு ஜசிந்தா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையும் மோதின.

போட்டி தொடங்கிய நேரம் முதல் முடிவடையும் வரை மைதானத்தில் ஜசிந்தா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் ஆதிக்கமே மேலோங்கி காணப்பட்டது.

இந்த நிலையில் ஜசிந்தா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை 30:07 புள்ளிகள் என்ற அடிப்படையில் மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலையை இலகுவாக வீழ்த்தி மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்டபட்டுள்ளது.

கடந்த ஆண்டு இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற பாடசாலைகள் முறையே முதலாம் இரண்டாம் இடங்களை பெற்ற நிலையில் கடந்தாண்டு சம்பியன் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

மூன்றாம் இடததுக்;கான போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியும்; வவுனியா பரக்கும்பா மகா வித்தியாலயமும் மோதிக் கொண்டதில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி; மூன்றாம் இடத்தை கைப்பற்றிக் கொண்டது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .