George / 2015 மே 27 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே நடைபெற்ற தாச்சி சுற்றுப் போட்டியில் உடுவில் ஆலடி சிந்து விளையாட்டுக் கழகம் 2015ஆம் ஆண்டுக்கான பிரதேச சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் தாவடி காளியம்பாள் விளையாட்டுக்கழகமும் உடுவில் ஆலடி சிந்து விளையாட்டுக் கழகமும் மோதின.
இரு அணிகளும் பலம் மிக்க அணிகளாக காணப்பட்ட நிலையில் முதற்பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் பழம் எதனையும் பெறாத நிலையில் ஆட்டம் முடிவடைந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் பழம் பெற வேண்டும் என்ற துடிப்புடன் களமிறங்கிய போதிலும் இரு அணிகளும் பழம் பெற எடுத்த முயற்சிகள் கை கூடாத நிலையில் காணப்பட்டன.
ஆனாலும் இரு அணிகளும் மனம் சோராது இறுதி வரை போராடிய நிலையில் ஆட்டம் முடிவடைய இரண்டு நிமிடங்கள் இருக்கையில் சிந்து விளையாட்டுக் கழக வீரன் பிரபாகரன் ஒரு பழத்தை பெற்றுக் கொண்ட நிலையில் ஆட்டம் முடிவடைந்தது.
ஆட்ட நிறைவில் சிந்து விளையாட்டுக் கழகம் 01:00 என்ற கணக்கில் காளியம்பாள் விளையாட்டுக் கழகத்தை வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கலந்து கொண்டார்.
48 minute ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
3 hours ago
8 hours ago