George / 2015 மே 28 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், வா.கிருஸ்ணா
2015ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட உடற்பயிற்சிப் போட்டியில் மட். கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
வலயமட்ட உடற்பயிற்சிப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று இப்பாடசாலை மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகி இருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை (25) மட். கோட்டமுனை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாகாண மட்ட (கிழக்கு மாகாணம்) உடற்பயிற்சிப் போட்டியிலும் இப் பாடசாலை முதலாம் இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இப்பாடசாலை மாணவர்கள் முதல் தடவையாக உடற்பயிற்சிப் போட்டியில் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளமை மிகவும் பெருமைக்குரிய விடயமாகும்.
மேலும் இப் பாடசாலையின் அதிபர் திருமதி டி.அருட்ஜோதியின் வழிகாட்டுதலின் கீழ் ஆசிரியர் அல்பிரின் யேசு சகாயத்தின் நெறிப்படுத்தலினாலேயே இம் மாணவர்கள் இச்சாதனையை ஈட்டியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
47 minute ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago
8 hours ago