Princiya Dixci / 2015 மே 29 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
வடமேல் மாகாண 17 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட கால்பந்தாட்ட போட்டியில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை அணி வெற்றி பெற்று வடமேல் மாகாண சம்பியனாகத் தெரிவாகியுள்ளது.
கல்வி அமைச்சின் அனுசரணையோடு பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய இந்த கால்பந்தாட்ட போட்டி, குருநாகல் மாளிகாபிட்டி மாநகரசபை மைதானத்தில் வியாழக்கிழமை (28) மாலை இடம்பெற்றது. மொத்தமாக 28 பாடசாலை அணிகள் இத்தொடரில் பங்கேற்றன.
மேற்படி தொடரில் அரை இறுதிப்போட்டியில் வென்னப்புவ ஜோசப் வாஸ் அணியை எதிர்கொண்ட புத்தளம் சாஹிரா அணி தண்ட உதையில் அவ் அணியை 03 கோல்களினால் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலையை எதிர்கொண்டது.
மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் புத்தளம் சாஹிரா தேசிய அணி 03 : 01 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மாகாண சாம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு அடுத்து வரும் அகில இலங்கை ரீதியிலான போட்டிக்கும் தெரிவாகியுள்ளது.
புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி அணிக்காக எம். முசக்கீர் இரு கோல்களையும் எம். மாயிஸ் ஒரு கோலினையும் பெற்றுக்கொடுத்தனர். இந்த அணிக்கு பயிற்றுவிப்பாளராக உடற்கல்வி போதனாசிரியரும் இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளன இளைஞர் அபிவிருத்தி இணைப்பாளருமான எம்.எப்.எம். ஹமாயூன் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் தேசிய ரீதியாக நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி அணி மூன்றாம் இடத்தைப் பெற்று புத்தளம் முன்னாள் நகர பிதா கே.ஏ. பாயிசினால் ஊர் தழுவிய ரீதியாக வரவேற்பு அளிக்கப்பட்டமையையும் இங்கு நினைவு கூறத்தக்கது.

47 minute ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago
8 hours ago