Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 மே 31 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன், வா.கிருஸ்ணா
பொன் அணிகளின் சமர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் பெரியகல்லாறு மத்திய கல்லூரியும் மோதும் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணிக்கும்; மற்றும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணிக்குமிடையிலான எவரஸ்ட் சவால் கிண்ணததுக்கான கிரிக்கட் போட்டி பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (30) நடைபெற்றது.
மத்திய கல்லூரியின் அதிபர் க. நல்லதம்பி தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அவ் அணி 43.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 145 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்;பெடுத்தாடிய மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 37.2 ஓவர்களில் 146 ஓட்டங்களைப் பெற்று இவ்வருடத்துக்கான சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் மா. நடராசா மற்றும் பட்டிருப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ். ஞானராஜா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தனர்.
கடந்த 2011இல் ஆரம்பிக்கப்பட்டு 4 வருடங்களாக நடைபெற்று வரும் இத்தொடரில், கடந்த வருடம் 2014 இல் மட்டக்களப்பில் நடைபெற்ற இப்போட்டியில் இந்துக்கல்லூரி எவரஸ்ட் சவால் கிண்ணத்தை சுவிகரித்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago