2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சதுரங்கத்தில் மட்டுமன்றி கராத்தேயிலும் சளைக்காத ஹரிகிஷன்

George   / 2015 பெப்ரவரி 24 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகள் பலவற்றிலும் நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்திய, சாம்பியன் பட்டங்களையும் பதக்கங்கiயும் சான்றிதழ்களையும் தம்வசப்படுத்திய  கண்டி, புனித திருத்துவ கல்ல}ரியில் 6ஆம் தரத்தில் பயிலும் மாணவனான கிருபாகர் ஹரிகிஷன், கராத்தேயிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கை சோடோகன் கராத்தே கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட 8ஆவது தேசிய கராத்தே சம்பியன் கிண்ண போட்டி, கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்றது.  இரண்டரை வயது முதல் சதுரங்கத்தில் தன்னுடைய திறமையை காண்பித்துவரும் இவர், போலந்து, இந்தியா, ரஷ்யா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச ரீதியிலான சதுங்க(செஸ்) போட்டிகளில் பங்கேற்று தனது திறமைகளை வெளிபடுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்தி, கல்லூரிக்கு பெருமை சேர்த்த ஹரிகிஷன், 11 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான  கராத்தே போட்டியில் முதன்முறையாக பங்கேற்று சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கண்டியை பிறப்பிடமாக கொண்ட இவர், உடுபிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியின் பழைய மாணவன் குணரத்னம் கிருபாகரன் மற்றும் திகளை மாபேதிதென்ன வித்தியாலயத்தின் ஆசிரியரான காஞ்சனா தம்பியதியரின் மகனாவார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .