Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 ஜூன் 02 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாண பல்கலைக்கழக விளையாட்டு அவையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஹொக்கிச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, இன்று செவ்வாய்க்கிழமை(02) மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஹொக்கி அணியை எதிர்த்து வட்டுக்கோட்டை ஓல்ட்கோல்ட் ஹொக்கி அணி மோதவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்திராக யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர் டி.காண்டீபனும் சிறப்பு விருந்தினராக யு.என்.டி.பி நிறுவனத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு யாழ்ப்பாணம் ஆகியவற்றுக்கான நிர்வாக நிதி அதிகாரி ஆர்.எக்ஸேவியரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இறுதிப்போட்டிக்கு முன்னதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பெண்கள் ஹொக்கி அணிக்கும் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை பெண்கள் அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ ஹொக்கிப் போட்டியொன்றும் நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago