2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வெற்றி

Princiya Dixci   / 2015 ஜூன் 04 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தால் சிங்கர் வெற்றிக் கிண்ணத்துக்காக பாடசாலைகளின் 15 வயது பிரிவு 3 அணிகளுக்கிடையில் நடத்தி வரும் 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி, ஒரு ஓட்டத்தால் வெற்றியீட்டியது.

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (03) நடைபெற்ற இப்போட்டியில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணியை எதிர்த்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி மோதியது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனக் கல்லூரி அணி, 39.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது. எஸ்.சதுர்சன் 29, எம்.பகீரதன் 20 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஸ்கந்தா அணி சார்பாக ஆர்.டிலுக்சன் 3, எல்.டனுசன், கே.சோபிகன் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தா அணி, மிகுந்த போராட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற முயற்சித்த போதும் கைகூடவில்லை. இறுதியில் 48.2 ஓவர்களில் 142 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது. எஸ்.நிகந்தன் 38 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் மகாஜனாக் கல்லூரி சார்பாக ஆர்.றேனுகன் 3, என்.பகீரதன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .