Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 05 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட கால்பந்தாட்டப்போட்டியின் மகளிர் அணிக்கான போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கடுக்காமுனை வாணி வித்தியாலயம் இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
மாகாண மட்ட மகளிர் கால்பந்தாட்டப் போட்டி, கல்முனை உவைஸ்லி பாடசாலை மைதானத்தில் புதன்கிழமை (03) இடம்பெற்றது. இப்போட்டியில் 09 பாடசாலை அணிகள் கலந்துகொண்டன.
இதில் இறுதிப் போட்டிக்கு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலைகளான
கடுக்காமுனை வாணி வித்தியாலய அணியும் அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய அணியும் தெரிவாகின.
இப்போட்டியில் கடுக்காமுனை வாணி வித்தியாலய அணி 3 க்கு 0 என்ற அடிப்படையில் அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய அணியை தோல்வியடையச் செய்து தேசிய மட்ட போட்டிக்கு தெரிவானது.
இப்போட்டியின் போது கடுக்காமுனை வாணி வித்தியாலய அணி முதலாவது இடத்தையும் அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய அணி இரண்டாம் இடத்தையும் வாகரை மகா வித்தியாலய அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
கடுக்காமுனை வாணி வித்தியாலய மகளிர் கால்பந்தாட்ட அணியானது தேசிய மட்ட மகளிர் கால்பந்தாட்ட போட்டிகளில் 2012, 2013ஆம் ஆண்டுகளில் பங்கு பற்றி முறையே மூன்றாம் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்று சாதனை படைத்த அணி என்பது பெருமைக்குரிய விடயம்.
இவ் அணி இவ்வாறு தேசிய ரீதியில் சாதனை படைப்பதற்கு இவ் அணியின் பயிற்றுவிப்பாளர் மா. ஜீவரெத்தினம் ஆசிரியர் மற்றும் இப்பாடசாலையின் அதிபர் சு.தேவராஜனின் பங்களிப்பு இன்றியமையாதது.
கடந்த ஆண்டும் கிழக்கு மாகாண பாடசாலை மட்டப்போட்டியில் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டு தேசிய போட்டியில் இந்த அணி கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago