2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஒலுவில் முன்பள்ளி மாணவர்களின் இல்ல விளையாட்டு விழா

George   / 2015 ஜூன் 10 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா, ஐ.ஏ.ஸிறாஜ்
 
ஒலுவில் பிரதேச முன்பள்ளி பாடசாலைகளின் இல்ல விளையாட்டு விழா, ஒலுவில் அல்- ஹம்றா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை(07) நடைபெற்றது.

இந்த போட்டி நிகழ்வுகளில் அல்- ஹிலால், இலாஹியா மற்றும் இளம்பிறை ஆகிய பாலர் பாடசாலைகள் கலந்துகொண்டன.
முன்பள்ளி பாடசாலைகளின் சம்மேளனத்தின் தலைவர், தபாலதிபர் யூ.கே. அப்துல் றஹ்மான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.

அத்துடன், சிறுவர் நன்னடத்தை அதிகாரி எம்.ஏ. பஸிர்டீன், உதவிக் கல்விப் பணிப்பாளர் என். ஜமால்டீன், முன்னாள் உதவி தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா ஆகியோர் விசேட அதிதிகளாக இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .