Princiya Dixci / 2015 ஜூன் 12 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
சம்பியன் மகுடம் சூடி ஒரு வார காலத்துக்குள்ளேயே அந்த சம்பியன் தகுதியை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் புத்தளம் நடப்பு சம்பியனான லிவர்பூல் கால்பந்தாட்ட கழகம் மற்றுமொரு கால்பந்தாட்ட போட்டித் தொடரில் புத்தளம் போல்டன் அணியிடம் வீழ்ந்து அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.
இப்போட்டியானது புத்தளம் சாகிரா தேசிய கல்லூரி மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை (11) மாலை இடம்பெற்றது.
புத்தளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்ட தொடரின் மூன்றாவது போட்டியிலேயே இவ்விரு அணிகளும் மோதிக்கொண்டன.
போட்டி ஆரம்பம் முதலே ஆட்டம் விறு விறுப்பாக நடைபெற்றாலும் இறுதி வரைக்கும் எந்த அணியும் கோல் போட முடியாமல் போட்டி சமநிலையில் நிறைவடைந்தால் பிரதம நடுவர் வெற்றியை தீர்மானிப்பதற்காக தண்ட உதையை வழங்கினார்.
தண்ட உதையில் 04:03 என்ற கோல்களினால் போல்டன் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டிக்கு நடுவர்காளாக எம்.எஸ்.எம். ஜிப்ரி, எம்.ஆர்.எம். அம்ஜத் மற்றும் ஏ.எம். சபீக் ஆகியோர் ஈடுபட்டருந்தனர்.
இந்த போட்டியில் லிவர்பூல் அணியானது தனது அணியின் புதிய இளைய வீரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக புதிய வீரர்களை களம் இறக்கியதன் விளைவாகவே இந்நிலை தோன்றியுள்ளதாக லிவர்பூல் அணி ரசிகர்கள் கூறினர்.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago