Princiya Dixci / 2015 ஜூன் 12 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்
நிந்தவூர் சோண்டஸ் விளையாட்டுக்கழகத்தின் 23ஆவது வருட நிறைவையொட்டி நிந்தவூரில் இரண்டாவது முறையாக நேற்று வியாழக்கிழமை (11) இரவு நடத்தப்பட்ட மின்னொளி கால்பந்தாட்டப் போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.
நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்றிரவு (11) இடம்பெற்ற இப்போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகமும் அக்கரைப்பற்று இலவன் விளையாட்டுக் கழகமும் மோதின.
மிக விறுவிறுப்புக்கு மத்தியில் இடம்பெற்ற இப்போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக்கழகத்தின் வீரர் கே.எம்.அக்ரம் அக்கரைப்பற்று இலவன் விளையாட்டுக்கழகத்துக்கு ஒரு கோளை போட்டு 1 – 0 என்ற அடிப்படையில் சோபர் விளையாட்டுக்கழகம் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
சோண்டஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டிக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் மத்திய குழுவின் தலைவருமான ஏ.எஸ்எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
மேலும், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், சோண்டஸ் விளையாட்டுக் கழகத்தின் தவிசாளருமான எம்.ஏ.எம். தாஹிர், நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.தாஜுதீன், அட்டாளைச்சேனை பிரதேச அனைத்து விளையாட்டுக் கழகங்களின் தலைவர் ஹம்ஸா சனூஸ் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.சஹாப்தீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago