2025 நவம்பர் 19, புதன்கிழமை

கரப்பந்தாட்டப் போட்டியில் நுவரெலியா சாதனை

George   / 2015 ஜூன் 17 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ஆ.கோகிலவாணி

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டியில் நுவரெலியா மாவட்டம், எட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

இப்போட்டிகளில் கலந்துகொண்ட ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட மூன்று தமிழ்ப் பாடசாலைகள் உட்பட நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட 5 தமிழ்ப் பாடசாலைகள்  வெற்றியை சுவீகரித்துகொண்டன.

15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஹட்டன் கல்வி வலயத்தை சேர்ந்த பொர்லோன்  தமிழ் மகா வித்தியாலயம் முதலாமிடத்தையும் மாத்தளை, அக்குறாம்படை சிங்கள வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும் கந்தப்பளை, மெதடிஸ்ட் தமிழ் மகா வித்தியாலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

இதேவேளை, 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில்  கந்தப்பளை, மெதடிஸ்ட் தமிழ் வித்தியாலயம் முதலாம்

இடத்தையும் டிலரி தமிழ் மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் முதலாம் இடத்தையும் மஸ்கெலியா சென். ஜோசப் தமிழ் மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும் நுவரெலியா கேம்பிரிட்ஜ் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றுகொண்டன.

15,17,19 வயது பிரிவுக்குட்பட்ட ஆண், பெண் பிரிவினருக்கிடையில் இப்போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X