2025 ஜூலை 05, சனிக்கிழமை

புத்தளம் தில்லையடி நியூ பிரண்ட்ஸ் கழகம் சாம்பியன்

Gavitha   / 2015 ஜூன் 18 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டி தொடரில்,  புத்தளம் தில்லையடி நியூ பிரண்ட்ஸ் கால்பந்தாட்ட கழகம் மற்றுமொரு சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

இந்த குறுகிய கால நொக் அவுட் முறையிலான கால்பந்தாட்ட தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டி, புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (17) மாலை இடம்பெற்றது.

புத்தளம், கொழும்பு வீதி தில்லையடி பிரதேச வீரர்களை கொண்டதும் பல்வேறு கிண்ணங்களை சுவீகரித்த அணியுமான நியூ பிரண்ட்ஸ் அணியினரோடு, சுமார் ஒரு தசாப்த காலத்துக்கு பிறகு இறுதிப்போட்டியை சந்தித்து சம்பியன் கிண்ணத்தை சுவீகரிக்கலாம் என்ற எண்ணத்தோடு இருந்த புத்தளம் நகரின் மிகப்பழைமை வாய்ந்த அணியான போல்டன் அணி, இந்த இறுதி போட்டியில் களம் இறங்கின.

போட்டி ஆரம்பித்து நிறைவு பெரும் வரையில் இரு அணிகளும் கோல் போட முயற்சித்தும் முடியாமல் போனது. இரு அணிகளின் முன் கள வீரர்களுமே கோல்களை செலுத்த பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டனர்.

வெற்றியை தீர்மானிப்பதற்காக பிரதம நடுவரினால் வழங்கப்பட்ட தண்ட உதையில், தில்லையடி நியூ பிரண்ட்ஸ் 03 : 02 கோல்களினால் வெற்றி பெற்று புத்தளம் பிரதேச செயலக சாம்பியனாக தெரிவானது. தில்லையடி நியூ பிரண்ட்ஸ் அணியை சர்வதேச கால்பந்தாட்ட நடுவர் எம்.எஸ்.எம். ஜிப்ரி பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வழி நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கு நடுவர்களாக ஏ.எச். உமர் பாச்சா, எஸ்.ஆர்.எம். ஆஸாத். ஏ.எம். சபீக் ஆகியோர் கடமையாற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .