Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 21 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
நிந்தவூர் சோண்டஸ் விளையாட்டுக்கழகம் தனது 23ஆவது வருட நிறைவையொட்டி இரண்டாவது முறையாக நடாத்திய மாபெரும் மின்னொளி கால்பந்துப் போட்டியின் இறுதிப்போட்டியில் சம்மாந்துறை றோயல் மெட்ரிட் கழகம், சோண்டஸ் சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
12 அணிகள் கலந்து கொண்ட இத்தொடரின் இறுதிப்போட்டி, நிந்தவூர் சோண்டஸ் மற்றும் சம்மாந்துறை றோயல் மெட்ரிட் அணிகளுக்கிடையில் நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றது.
ஆரம்ப நிமிடம் முதல் இறுதி நிமிடம் வரை இவ்விரு அணிகள் சார்பாக எந்த கோள்களும் போடப்படாத நிலையில் பெனால்டி முறை மூலமாக 2:0 என்ற கோள் வித்தியாசத்தில் சம்மாந்துறை றோயல் மெட்ரிட் அணி சம்பியனானது.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு 15,000 ரூபாய் பணப்பரிசும் வெற்றிக்கோப்பையும் தோல்வியுற்ற அணிக்கு 10,000 ரூபாய் பணப்பரிசும் கோப்பையும் வழங்கி வைக்கப்பட்டது.
இப்போட்டி, சோண்டஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.பி. நவாஸ் தலைமையில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், சோண்டஸ் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகத் தலைவரும், சுகாதார அமைச்சின் தேசிய நோய்த் தடுப்புப் பிரிவின் பணிப்பாளருமான டாக்டர் ஏ.எல். பரீட், சோண்டஸ் விளையாட்டுக் கழகத்தின் தவிசாளரும், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.ஏ.எம். தாஹிர், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஐ.எம். றியாஸ், சட்டத்தரணிகளான ஏ.எம். நசீல், முன்னாள் கால்பந்து அணிகளின் சிரேஷ்ட வீரர்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த இறுதி நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின்போது சோண்டஸ் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் டாக்டர் ஏ.எல். பரீட்க்கு பொன்னாடை போர்த்தி ஞாபகச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025