2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஜெயபுரத்தில் GYM

George   / 2015 ஜூன் 24 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜெயபுரம் கிராமத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரின் 5 இலட்சம் ரூபாய் நிதியுதவியில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் (ஜிம்), ஞாயிற்றுக்கிழமை (21) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதேச இளம் சமூகத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஜெயபுரம் முழங்காவில் பிரதான வீதியில் இந்த உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டது.

இந்த உடற்பயிற்சிக் கூடத்தை அப்பகுதி இளைஞர்கள் நிர்வகிக்கவுள்ளனர். இந்தத் திறப்பு விழா நிகழ்வில், வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதனும் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .