George / 2015 ஜூலை 01 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-மு.இராமசந்திரன்
நுவரெலியா மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டியில், ஆண்கள் பிரிவில் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயமும் பெண்கள் பிரிவில்; பொரமடுல்ல சிங்கள கல்லூரியும் சம்பியனாகின.
வடக்கு மலையக விளையாட்டு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அண்மையில்; நடைபெற்ற கரப்பந்தாட்டப் போட்டியானது நோர்வூட் தொண்டமான் விளையாட்டு அரங்கத்தில், ஒன்றியத்தின் தலைவர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது.
இறுதிச் சுற்றுக்கு நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய ஆண்கள் அணியும் கொட்டகலை கேம்பிரிட்ஜ் வித்தியாலய ஆண்கள் அணியும் மோதியதுடன். மூன்றாம் இடத்தை தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய அணி பெற்றுக்கொண்டது.
பெண்கள் அணியில் முதலிரு இடங்களை பொரமடுல்ல சிங்களக் கல்லூரியின் இரு அணிகளும் மூன்றாம் இடத்தை பொகவந்தலாவை தர்ம கீர்த்தி கல்லூரி அணியும் பெற்றுக்கொண்டன.
மத்தியமாகாண விவசாய இந்து கலாசார அமைச்சர் ராம், நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
57 minute ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
3 hours ago
8 hours ago